டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு.!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC Group 1 Mains Exam

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1 தேர்வை நடத்தி, தமிழ்நாடு அரசின் உயர்நிலைப் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று (ஏப்ரல் 1) வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் துணை ஆட்சியர் (Deputy Collector), துணை காவல் கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police), உதவி ஆணையர் (Assistant Commissioner) போன்ற உயர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மொத்தம் 70 பணியிடங்களுக்கான குரூப் 1, 1A தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 15ஆம் தேதி Group 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க செய்ய கடைசி நாள் : 30.04.2025

விண்ணப்பத்தை சரி செய்ய : ஏப். 5 முதல் ஏப் 7 வரை

முதல்நிலை தேர்வு தேதி : 15.06.2025

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்