சென்னை மெரினாவில் தமிழக அரசின் பல்வேறு துறையினர் சார்பில் 74வது குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியின் முதல் பரிசு தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டது.
இன்று இந்தியா முழுவது 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தமிழக அரசு சார்பில் சென்னையில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மெட்ரோ பணிகள் நடைபெறும் காரணத்தால் இந்தாண்டு வழக்கமாக நடைபெறும் காமராஜர் சாலை காந்தி சிலை அருகே விழா நடைபெறவில்லை. மாறாக மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இந்த விழா நடைபெற்றது .
முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஆளுநர் ரவி : இந்த விழாவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் காலை 8 மணி அளவில் வந்தனர். அதன் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய தேசிய கொடியை ஏற்றினார். அப்போது, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. அதன் பிறகான பல்வேறு துறைகளின் அணிவகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
அணிவகுப்பு ஊர்திகள் : அந்த அணிவகுப்பில், கடலோர காவல் படை,கடற்படை, விமானப்படை என முப்படையினர், கடலோர காவல் படையினர், தமிழக காவல்துறையினர், சிறைதுறை, வனத்துறை, தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர், மக்கள் தொடர்பு துறை, செய்தி துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர் அணிவகுப்பும், அந்தந்த துறைகளின் அலங்கார ஊர்திகளும் வலம் வந்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.
தமிழக காவல் துறை : இதில் முதலிடம் தமிழக காவல் துறையினர் தயார் செய்த கிடைத்தது. இரண்டாம் இடம் தமிழக தீயணைப்பு துறையினருக்கு கிடைத்தது. மூன்றாம் இடம் செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு கிடைத்தது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…