பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்..!
2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையுடன் தொடங்கவுள்ள நிலையில், இக்கூட்டத்தில், தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.