தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட கூடாது.! தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை.?
தி கேரளா ஸ்டோரி வெளியிட கூடாது தமிழக உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியில் தயாராகி இந்தி உட்பட, தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் என 5 மொழிகளில் தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது. இந்த படத்திற்கு தடை கேட்டு கேரள அரசு உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த படத்தின் ட்ரைலரில், இந்து பெண்ணை இஸ்லாமிய பெண்கள் மதமாற்றி எவ்வாறு தீவிரவாத கும்பலுடன் இணைகிறார் எனவும், இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது எனவும் குறிப்பிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் கேரளாவில் இந்த பாடம் ரிலீஸ் ஆகுமா என எதிர்பார்த்த நிலையில், தமிழக உளவுத்துறை அரசுக்கு ஓர் எச்சரிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி கேரள ஸ்டோரி படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்வும், அது தமிழ்நாட்டில் திரையிட பட்டால் சர்ச்சை எழும் வாய்ப்புள்ளது எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.