நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இதுதான்.! அரியலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய விளக்கம்.!
நீட் தேர்வு ரத்து ஆகும் வரை தமிழக அரசின் சட்ட போராட்டம் தொடரும் எனவும், இதுதான் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம். – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
இன்று அரியலூரில் செயல்படும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 22 கோடி ரூபாய் செலவில் புதியதாக ஓர் மருத்துவ வளாகம் திறந்து வைக்கப்ட்டது. இந்த புதிய மருத்துவ வளாகத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
முதல் கோரிக்கை :
இந்த அனிதா அரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார். அப்போது அந்த விழாவில் உதயநிதி பேசுகையில், நான் சட்டமன்றத்தில் வைத்த முதல் கோரிக்கை மாணவி அனிதா நினைவாக மருத்துவ அரங்கிற்கு அவர் பெயர் வைக்க வேண்டும் என கோரியிருந்தேன்.
முதல்வர் அழைப்பு – அறிவிப்பு :
நேற்று இரவு எனக்கு முதல்வர் போன் செய்து, நீ வைத்த முதல் கோரிக்கை என கூறி, அரியலூரில் 22 கோடி ருபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவ அரங்கிற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் வைக்க உத்தரவிட்டதாக கூறினார் என அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டார்.
நீட் தேர்வு ரத்து ரகசியம் :
மேலும், நீட் தேர்வு ரத்து ரகசியம் பற்றி எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கேட்டு கொண்டு இருக்கிறார். அது ஒன்றுமில்லை. எங்களது கல்வி உரிமை பறிக்கப்படும் போது தைரியமாக குரல் கொடுப்பது தான் எனவும், நீட் தேர்வு ரத்து ஆகும் வரை தமிழக அரசின் சட்ட போராட்டம் தொடரும் எனவும் இதுதான் அந்த ரகசியம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சட்டப்போராட்டம் தொடரும் :
அடுத்ததாக, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோதும் கூட நான் வைத்த முதல் கோரிக்கை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் . அதற்கு அவர் நீட் தேர்வு வேண்டும் என பல்வேறு காரணங்கள் கூறினார். என்னென்ன நன்மை எனவும் கூறினார். இருந்தும் இறுதியாக நான் கூறுகையில், தமிழக அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என கூறிவிட்டு தான் திரும்பினேன் எனவும் அமைச்சர் உதயநித்திஷ் ஸ்டாலின் அனிதா நினைவு அரங்கம் திறப்பு விழாவில் பேசினார்.