பான் மசாலா – குட்கா விவகாரம்.! உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.!
பான் மசாலா, குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவை நீக்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விரைவில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருள்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அப்போது உத்தரவு பிறப்பித்தார். அப்போது இருந்து இந்த உத்தரவு தமிழகத்தில் அமலில் இருந்து வந்தது. இதனை மீறியதாக பல்வேறு குற்ற வழக்குகளும் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் இருந்தன. இந்த வழக்கு விசாரணை அண்மையில் நடைபெற்ற போது, உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்க ஏற்கனவே விதிக்கப்பட்ட சட்டங்கள் வழிவகை செய்யவில்லை. அது அவசர சட்டமாகவே தற்காலிகமாக தடை செய்யப்பட பிறப்பித்த உத்தரவு எனக்கூறி உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். மேலும், இந்த தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என நீதிபதி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து பேசிய தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும். என அமைச்சர் கூறியுள்ளார்.