கனிம வளங்கள் கடத்தல்.! தாசில்தார்கள் தலைமையில் சிறப்பு குழு.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.!

Default Image

கனிம வளங்கள் கடத்தல் வழக்கில் இன்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்தது. 

 கோவை மாவட்டத்தில் இயங்கும் 300க்கும் மேற்பட்ட குவாரிகளில் சுமார் 80 சதவீதம் குவாரிகள் அனுமதி இன்றி தான் செயல்பட்டு வருகின்றன என்றும், அங்கிருந்து தமிழக கனிம வளங்கள் வெளிமாநிலத்திற்கு கடத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டு இருந்தது.

இந்த பொதுநலவழக்கில் ஏற்கனவே தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என விளக்கம் அளிக்க கேட்டிருந்தது.

அதன்படி, இன்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், தாசில்தாரர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கனிமவளங்கள் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், அந்த குழுக்கள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், தற்போது கனிமவளங்கள் கடத்தல் பெருமளவு குறைந்துவிட்டது எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.

தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தற்போது ஒத்திவைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்