நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பதிற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் -டிடிவி தினகரன்

Default Image

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்.

கேரளாவில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக  ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த நிலச்சரிவில் மாயமான 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி 5-வது நாளாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் பெரும்பாலனோர் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 22 பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தின் கயத்தாரைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பெற்றோரை இழந்திருப்பவர்களுக்கு கல்வி உதவி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதுடன் பிள்ளைகளை இழந்து தவிக்கும் வயதான பெற்றோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்