தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் : கமலஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேற்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
கமலஹாசன் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிக்க, தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்த புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக அரசை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருந்தனரே தவிர அடுத்த கட்ட நடவடிக்கையை சரியாக செய்யவில்லை என்று கூறியுள்ளார். அரசுடன் இணைந்து நிவாரண பணிகளில் செயல்படுவதில், தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை என கூறியுள்ளார்.