#BREAKING: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.. ஸ்டாலின்.!
சட்டப்பேரவைக் கூட்டம் 3 நாள்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நேற்று தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. இந்நிலையில், இன்று கேள்வி நேரத்துடன் 2-வது நாளாக சட்டப்பேரவை தொடங்கியது.
இன்று காலை முதல் சட்டப்பேரவையில் விறுப்பாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது எனவும், முறையாக திட்டமிடப்படாத பொது முடக்கத்தால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? , மரணங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை, குழுவின் அறிக்கை என்ன ஆனது..? மாவட்ட மருத்துவமனையில் உள்ள தொழில் நுட்பத்தை வெளியிட வேண்டும் என கூறினார். இதையடுத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5 ஆயிரம் தமிழக அரசு அளிக்க வேண்டும் என சட்டப்பேரவை ஸ்டாலின் கூறினார்.