மிதக்கும் எண்ணையை எடுக்க தீவிர முயற்சி… தமிழக அரசு நடவடிக்கை.!

Ennore Oil Spill

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு சமயத்தில் புறநகர் எண்ணூர் பகுதியில் இயங்கி வரும் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து தேக்கி வைக்கப்பட்டு இருந்த எண்ணெய் கழிவுகள் வெள்ளநீரோடு கலந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கடற்பரப்பில் பரவி அப்பகுதி மக்களை பெரும் பாதிப்புள்ளாகியுள்ளது.

இதனால், எண்ணெய் கழிவு கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இது குறித்து, உரிய ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவானது நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், சென்னை எண்ணூரில் மத்திய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் (Chennai Petroleum Corporation Limited) நிறுவனத்தில் இருந்தே இந்த எண்ணெய் கழிவு பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக எண்ணூர் கழிமுகம் பகுதியில் கலந்துள்ளத என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எண்ணூர் எண்ணெய் கழிவு விவகாரம் பசுமை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, எண்ணூரில் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். சிறார்களை எண்ணெய் அகற்றும் பணிகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்து இந்த வழக்கை டிச.14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது எண்ணெய் அகற்றும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக நவீன எந்திரங்கள் கொண்டு எண்ணெய் அகற்றும் பணியை தொடங்கியுள்ளது. இதில் அகற்றப்படும் அபாயகரமான பொருட்கள் கும்மிடிப்பூண்டியில் பாதுக்காப்பாக வைக்கப்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman