நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தமிழக அரசு வயிற்றில் நெருப்பை கட்டிக்க கொண்டு இருக்கிறது – அன்பில் மகேஷ்
மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
கடந்த ஜூன் 17-ஆம் தேதி நீட் நுழைவு தேர்வு நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில், நீட் தேர்வு எழுதியவர்களில் 80% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப்போராட்டம் தொடர்கிறது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறது அரசு. மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம்.’ என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நீட் தேர்வு தோல்வியால், இன்று காலை சென்னையை சேர்ந்த சுவேதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.