முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக மதுரையை சார்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன்,ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்ததாக கூறி,வழக்கு 3 வது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இதனை எதிர்த்து,முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.அதில்,தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை,சென்னை உயர்நீதிமன்றம் விதிமுறைகளை பின்பற்றாமல் விசாரிக்கிறது என்று தெரிவித்தார். மேலும்,இந்த வழக்கில் முன்னதாக நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது
இந்நிலையில்,இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.மேலும்,ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…