தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு – தமிழக அரசு உத்தரவு..!
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டு,ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில் முக்கியமான ஒன்றான ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப் படுகிறது என்றும்,இத்திட்டம் வருகின்ற மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது.அதன்படி,பசும்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.28 இல் இருந்து ரூ.32 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதேபோல்,ஒரு லிட்டர் எருமைப்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு,ரூ.35-ல் இருந்து ரூ.41 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பால் விற்பனை விலையினை அரசு நன்கு பரிசீலனை செய்து இம்முடிவினை எடுத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதனையடுத்து,இந்த அரசாணையானது வருகின்ற மே 16 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.