ரூ.641 கோடி செலவில் குப்பைகளை அகற்ற புதிய திட்டம்.! தமிழக அரசு அனுமதி.!
பயோ மைனிங் முறையில் கொடுங்கையூர் குப்பைகளை அகற்ற தமிழக அரசு அனுமதிஅளித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் கொடுங்கையூர் பகுதியில் கொட்டுவது வழக்கம். அந்த குப்பைகளை அகற்ற தற்போது சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 641 கோடி ரூபாய் செலவில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து அதனை உரமாக மாற்றி மறுசுழற்சி செய்யும் பயோ மைனிங் முறையில் அந்த குப்பைகளை அகற்ற தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.