#Breaking:27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி-தமிழக அரசு அறிவிப்பு..!
- தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து,இதர 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக தேநீர் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.இதனால்,பல்வேறு தரப்பினரும் தேநீர் கடைகளை திறக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில்,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து,இதர 27 மாவட்டங்களில்,நாளை முதல் தேநீர் கடைகளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
- அதன்படி,பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும்போது,மக்கள் வீட்டில் இருந்து பாத்திரங்களை கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும்,பிளாஸ்டிக் பைகளில் தேநீர் பெறுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மேலும்,கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதியில்லை.