தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை.! தமிழக அரசு அறிவிப்பு.!

இந்தியாவில் தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலிடம் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அதில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் மறுநாள் திங்கள்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும்.வெளியூர் செல்லும் பொதுமக்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாள் திங்களன்று விடுமுறை நாள் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவரது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலன் கருதி 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், விடுமுறை ஈடும் செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024