மாணவர்களுக்கு நற்செய்தி! தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு!
விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக வரும் நவம்பர் மாதம்-9 ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

சென்னை : தீபாவளி பண்டிகைக்கு வெளியூருக்குச் சென்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். அப்படி, கொண்டாடிவிட்டு அடுத்த நாள் அவர்களது வீட்டுக்கு மற்றும் வேலைக்கு திரும்புவோருக்கு சிரமமாக அமையும் என்பதர்காக தமிழக அரசு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் , பள்ளி. கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் நவம்பர்-1ம் தேதி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 31-ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அடுத்த நாள் ஊர்க்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் இவர்களின் நலனை கருத்தில் கொண்டு நவம்பர் 1-ம் தேதியும் (வெள்ளிக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.
மேலும், நவம்பர் 1-ம் தேதி விடுமுறை விடப்படுவதால், அதனை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
![TN Government Statement For Diwali [file image]](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/10/TN-Government-Statement-For-Diwali.webp)