#Breaking:10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை;தேர்வு ஒத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

Published by
Edison

சென்னை:தமிழகத்தில் உள்ள 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முன்னதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால்,10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது.

இதற்கிடையில்,கொரோனா அதிகரித்து வருவதால் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்து,ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் , தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Recent Posts

“தண்ணீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” இந்தியாவுக்கு எச்சரிக்கை விட்ட பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்!“தண்ணீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” இந்தியாவுக்கு எச்சரிக்கை விட்ட பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்!

“தண்ணீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” இந்தியாவுக்கு எச்சரிக்கை விட்ட பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்!

இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…

2 hours ago
போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

7 hours ago
நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

7 hours ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

8 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

8 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

9 hours ago