குட்நியூஸ்…இன்று முதல் ஜன.13-ம் தேதி வரை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Published by
Edison

சென்னை:இன்று முதல் ஜன.13-ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,கோயம்பேடு,பூந்தமல்லி,மாதவரம்,கே.கே.நகர்,தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும்,பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க பயணிகள் 94450 14450,94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும்,ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் தெரிவிக்கலாம் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Recent Posts

ஆஸ்கர் விருது: இறுதி பட்டியலில் இந்திய குறும்படம்! ‘எமிலியா பெரெஸ்’ படம் 13 பிரிவுகளில் பரிந்துரை!

ஆஸ்கர் விருது: இறுதி பட்டியலில் இந்திய குறும்படம்! ‘எமிலியா பெரெஸ்’ படம் 13 பிரிவுகளில் பரிந்துரை!

அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…

6 hours ago

“பொறுப்புக்கு பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் தூக்கிருவோம்”… இது தளபதி உத்தரவு – பொதுச்செயலாளர் ஆனந்த்.!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…

6 hours ago

டங்ஸ்டன் திட்டம் ரத்து: ‘தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி’… அரசியல் தலைவர்கள் வரவேற்பு.!

சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…

6 hours ago

“மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப்…

8 hours ago

டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்த மத்திய அரசு! “பிரதமர் மோடிக்கு நன்றி” – அண்ணாமலை

சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

9 hours ago

மதுரை: டங்ஸ்டன் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு.!

மதுரை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…

9 hours ago