குட்நியூஸ்…இன்று முதல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!
மருத்துவம் தவிர,அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என்றும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும்,சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.அதன்படி,
- மருத்துவம் தவிர,அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- பேருந்து,புறநகர் இரயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி
- அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை.
- பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி.
- பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
இதற்கிடையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.அதாவது,ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
மேலும்,கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு study holiday விடப்படும் என்றும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதை தொடர்ந்து எக்காரணத்தைக் கொண்டும் இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்தாக கூறப்படுகிறது.