ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இதுவரை 688 வழக்குப்பதிவுகள்.! தேர்தல் ஆணையம் தகவல்.!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் தேர்தல் தொடர்பாக 688 வழக்குகளுக்கு எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுத்தேர்தல் களம் போல மாறி நிற்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம். அந்தளவுக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன.
688 வழக்குகள் : வரும் 27ஆம் தேதி திங்கள் கிழமை தேர்தல் நடைபெறுவதால், நாளை மாலை 5 மணியுடன் அனைத்து வகையான பிரச்சாரமும் நிறைவு பெறுகிறது. எனவும், இதுவரை தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதியப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது அதில் 647 வழக்குக்கள் மதுபானம் குறித்த வழக்குகள் எனவும் தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
பிரச்சாரம் ஓய்வு : மேலும், நாளை மலை 5 மணிக்குள் அனைத்து கட்சி மற்றும் நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, மாலை 6 மணிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் யாரும் தேர்தல் நடைபெறும் தொகுதியில் இருக்க கூடாது. எனவும்,
சிசிடிவி கேமிராக்கள் : தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டு, அந்த சிசிடிவி கேமிராக்களை தலைமை தேர்தல் அலுவலகத்தில் இருந்தபடி கண்காணிக்கப்பட உள்ளது. இதனை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையமும் கண்காணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு தடை : மேலும், ஒரு கட்சியின் பூத்தானது வாக்குச்சாவடியில் இருந்து 200மீ தொலைவில் தான் அமைக்க வேண்டும எனவும் நாளை மாலை 6 மணி முதல் தேர்தல் விவகாரங்ளை சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை , தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை எனவும், வழக்கமான உத்தரவுகள் வெளியாகியுள்ளன.