தமிழக பட்ஜெட் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்வு முன்னேற்றம் அடையும் வகையில் இருக்கும்-அமைச்சர் ஜெயக்குமார்
தமிழக பட்ஜெட் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்வு முன்னேற்றம் அடையும் வகையில் இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.மத்தியில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும் என்பது ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்தது. மீனவர்களின் நீண்டகால கோரிக்கை மற்றும் அதிமுக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மீன்வளத்துறையின் நன்னாள்,பொன்னாள்.இது பாஜகவின் இறுதி பட்ஜெட்டா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
கமிஷன், கலெக்ஷ்ன், கரெப்ஷன் என்கிற triple c’க்கு சொந்தக்காரர் ஸ்டாலின் தான். இதை ஸ்டாலின், அதிமுகவை பார்த்து சொல்வது வேடிக்கையாக உள்ளது. ஊழலுக்காக உலகில் கலைக்கப்பட்ட முதல் அரசு திமுக அரசு.
அதேபோல் பிப்ரவரி 8-ம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்வு முன்னேற்றம் அடையும் வகையில் சலுகைகள் நிறைந்து இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.