தமிழக காங்கிரசிலும் கருத்து வேறுபாடுதான் உள்ளது – தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி
தமிழக காங்கிரசிலும் கருத்து வேறுபாடுதான் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறுகையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் பேசினேன்.கருத்து வேறுபாடுகள் இல்லாத கட்சி இந்தியாவில் எங்கேயாவது உள்ளதா? தமிழக காங்கிரசிலும் கருத்து வேறுபாடுதான் உள்ளது. கோஷ்டி பூசல் இல்லை .ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக இந்த மாதம் தமிழகம் வருகிறார், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.