உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு குடமுழுக்கு!
சேலம் முத்துமலையில் அமைத்துள்ள 146 அடி மிக பிரம்மாண்ட முருகன் சிலை திறக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்து மலை அடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலைக்கு குடமுழுக்கு திருவிழா (கும்பாபிஷேகம்) இன்று நடைபெற்று வருகிறது. விமர்சியாக நடைபெற்று வரும் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தகர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குட முழுக்கு நிகழ்ச்சியின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்திர கவுண்டம்பாளையத்தில் ஸ்ரீ முத்துமாலை முருகன் அறக்கட்டளை (SMMT) இந்த முருகன் சிலையை கட்டியுள்ளது. முத்து மலை அடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு இந்த சிலை மலேசியாவின் பத்துமலை முருகனை விட 6 அடி உயரம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.