நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் தாஜ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும் – உயர்நீதிமன்றம் அதிரடி

Published by
லீனா

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் தாஜ்மஹாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ரயில்வே நடைபாதைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ரயில்வே நடைபாதைக்காக இரண்டு நீர்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரயில்வே நடைபாதை கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு வர தயாராக இருப்பதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்த நிலையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் தாஜ்மஹாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். நெடுஞ்சாலை ஆணையம்,  ரயில்வே ஆகியவற்றின் வளர்ச்சி திட்டங்கள் அவசியமானது என்றாலும், அவை இயற்கை வளங்கள், நீர்வளங்களை பாதிக்கும் வகையில் இருக்க கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நிலம் எந்த வகையை சார்ந்தது. நடைபாதை கட்டுமானத்தை இடிக்க செலவாகும் தொகை உள்ளிட்டவை குறித்து, தமிழக அரசு மற்றும் தென்னக ரயில்வே 3 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

24 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

36 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

48 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

54 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago