விக்டோரியா கவுரி நியமனத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Default Image

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மறுப்பு.

விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாஜக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. விக்டோரியா கவுரி சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தவர் என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவி ஏற்க உள்ள நிலையில், அவசரமாக உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது, நீதிபதியாக பதவி ஏற்க வழக்கறிஞர் விக்டோரியா கவுரி தகுதியற்றவர் என மூத்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் வாதம் முன்வைத்தார்.

விக்டோரியா கவுரி பதவி ஏற்புக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். அரசியல் பின்னணியில் உள்ளவர்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பதவியேற்றுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

விக்டோரியா கவுரியை அரசியல் காரணத்துக்காக எதிர்க்கவில்லை, வெறுப்பு பேச்சுக்காக மட்டுமே எதிர்க்கிறோம் என வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த சூழலில் விக்டோரியா கவுரி நியமனத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த சமயத்தில் வழக்கறிஞர் விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார்.

விக்டோரியா கவுரிக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். மறுபக்கம், உயர்நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கவுரி பதவியேற்பதை கண்டித்து வழக்கறிஞர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்