புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என கபொய்யான வதந்தி பரவியதால் , தமிழகத்தில் வாழ்ந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் சிறு பதற்றம் உண்டானது. இதனை அரசு உடனடியாக களைந்து , நடவடிக்கை எடுத்து வெளிமாநில தொழிலாளர்களிடத்தில் உருவான பதற்றத்தை போக்கியது.
உம்ராவ் மீது வழக்குப்பதிவு :
இதனை தொடர்ந்து போலியான செய்தியை பரப்பியதாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே போல , போலியாக செய்தி பரப்பி பதற்றத்தை உருவாக்கியதாக பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தமிழக காவல்துறையின் முன் ஆஜராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் மனு :
இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தன் மீது வழக்கு தொடரப்பட்டு இருப்பதால், அனைத்தையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என பிரசாந்த் உம்ராவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
வதந்தி :
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, தமிழக அரசு சார்பில் வாதிடுகைள , பிரசாந்த் உம்ராவ் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய்யான வதந்தி பரப்பி தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளார். அவர் காவல் துறை முன்பு இன்னும் மன்னிப்பு கூட கேட்கவில்லை என்று வாதிடப்பட்டது.
மன்னிப்பு கேட்க தயார் :
இதற்கு பதிலளித்த பிரசாந்த் உம்ராவ் வழக்கறிஞர், பிரசாந்த் உம்ராவ் தான் பதிவிட்ட டிவிட்ட்டர்களை நீக்கிவிட்டார். காவல்துறையினரிடம் எப்போது வேண்டுமானாலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தாயாராக இருக்கிறார் என்று வாதிட்டார்.
தமிழக அரசு நோட்டீஸ் :
இதனை ஏற்று, வரும் திங்கள் கிழமை பிரசாந்த் உம்ராவ் காவல்துறையினர் முன்னர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் காவல்துறை எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு செல்ல வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வதந்தி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…