தமிழக அரசு – ஆளுநர் விவகாரம்.! உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்….

Governor RN Ravi - Supreme court

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். கிடப்பில் போட்டு விடுகிறார் என்றும், ஆளுநர் மசோதாக்களுக்கு கையெழுத்திட கால நிர்ணயம் செய்யுமாறும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தது .

இந்த மனுவானது கடந்த 6ஆம் தேதி நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வின் முன் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது.

ஆன்லைன் சூதாட்ட தீர்ப்பு – மேல்முறையீடு செய்ய பரிசீலனை செய்யப்படும் : அமைச்சர் ரகுபதி

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் கையெழுத்திடாமல் அரசின் செயல்பாடுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி முடக்குகிறார், பணி நியமனம் தொடர்பான எந்தவொரு மசோதாவுக்கும் அனுமதி கொடுக்கவில்லை. கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்கவில்லை என்று தமிழக அரசு வாதத்தை முன் வைத்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், தமிழக அரசு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த அழகின் விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சந்திரசூட் தலைமையிலான நீதிபதி அமர்வு கூறுகையில், அரசியல் சாசன அமர்வின்படி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்றால், உடனடியாக அதனை திருப்பி அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். அவ்வாறு மாநில அரசால் மீண்டும் விளக்கம் தரப்பட்டு அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால், காலதாமதம் இன்றி ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என உத்தரவிட்டனர்.

மசோதாக்களுக்கு ஏன் ஆளுநர் முடிவெடுக்காமல் இருக்கிறார் என்பதை ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்