இடைக்கால தடை விதிக்க முடியாது.. குட்கா நிறுவனங்கள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!
குட்கா பொருட்களுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு குட்கா புகையிலை பொருட்கள் விற்க தமிழகம் முழுவதும் தடை விதித்து அப்போதைய உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஆண்டு முழுவதும் தானாக புதுப்பித்துக்கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்டு இருந்ததால், தொடர்ந்து குட்கா, புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
குட்கா தடை நீக்கம் : இந்த தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குட்கா நிறுவனங்கள் வழக்கு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உணவு பொருள் வழங்கல் ஆணையருக்கு நிரந்தர தடை விதிக்கும் அதிகாரம் கிடையாது. மேலும் உணவு பொருள் வழங்கல் ஆணையர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். என கூறி குட்கா பொருட்களுக்கு தமிழகத்தில் இருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : இந்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், தமிழகத்தில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு வாதம் : இந்த சமயத்தில் குட்கா பொருட்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படும். என கூறி, தமிழக அரசு வாதத்தை முன் வைத்துளளது . மேலும், இடைக்கால தடையாவது விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால தடை : இதில் பதில் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி, சம்பந்தப்பட்ட தரப்பை விசாரிக்காமல் இடைக்கால தடை விதியாக முடியாது. அதனால் , வருகிற 20ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். அதற்குள், குட்கா நிறுவனங்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.