சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு
சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 25-ம் தேதி கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி என்ற யானையை டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால்,கடந்த சில நாள்களாக சின்னத்தம்பி யானை தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி சுற்றி வருகிறது.
இதற்கு சின்னத்தம்பி என்ற யானையை கும்கியாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில் விலங்குநல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மேலும் யானைகள் முகாமில் சின்னதம்பி யானையை அடைக்க மனுதாரர் முரளிதரன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.