ஒன்றிய பாஜக அரசின் மூக்கை உடைத்துள்ளது உச்சநீதிமன்றம் – காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை

selvaperunthagai

ஜனநாயகம் முற்றிலுமாக மரித்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம் என செல்வப்பெருந்தகை ட்வீட். 

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே மிஸ்ராவின் பதவி காலத்தை மத்திய அரசு 3-வது முறையாக ஒரு வருடம் நீட்டித்து உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த பதவி நீட்டிப்பு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 3வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்த நிலையில், அவரது பதவி காலத்தை ஜூலை 31-ஆம் தேதி வரை குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒன்றிய அரசுக்கு எதிராக யார் பேசினாலும், கேள்வி கேட்டாலும் அமலாக்கத்துறையை ஏவி விட்டு, அவர்களை பழிவாங்கும் நோக்கில் அச்சுறுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தது பாசிச பாஜக அரசு. ஒன்றிய அரசுக்கு விசுவாசியாக இருந்து, பாஜக அரசு என்ன நினைக்கின்றதோ அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர்தான் அமலாக்கத்துறை இயக்குநனர் எஸ்.கே.மிஷ்ரா அவர்கள்.

அதற்கு அவருக்கு பரிசளிக்கும் விதமாக உச்சநீதிமன்ற தீர்ப்பையும், மீறி 3வது முறையாக அவருக்கு பதவிநீட்டிப்பு அளிக்கப்பட்டது. இன்று (11.07.2023) உச்சநீதிமன்றம் அவரின் பதவி நீட்டிப்பை சட்டவிரோதம் என்றுக் கூறி, தடை விதித்திருக்கிறது. ஒன்றிய அரசு சட்டவிரோதமாக செயல்படுகிறது எனக் கூறியிருப்பது மிகவும் வரவேற்கத் தக்க தீர்ப்பு.

இதன்மூலம் தான்தோன்றித்தனமாக, ஏதேச்சதிகாராமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் மூக்கை உடைத்துள்ளது உச்சநீதிமன்றம். ஜனநாயகம் முற்றிலுமாக மரித்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்