ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த பசுமை தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தநிலையில், தமிழக அரசு மேல்முறையீடு மனுவை ஏற்றுக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.