ஆர்எஸ்எஸ் பேரணி வழக்கு.! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!
ஆர்எஸ்எஸ் பேரணி குறித்த மேல்முறையீடு வழக்கு மார்ச் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. இதில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறி தமிழக அரசு இந்த பேரணிக்கு அனுமதி மறுத்தது .
மேல்முறையீடு :
இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. அங்கு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
விரிவான அறிக்கை :
இந்த மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு குறித்த வாதங்களை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 27ஆம் தேதி வழக்கு விசரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.