7 பேர் விடுதலைக்கு எதிரான மனு !தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Default Image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்ற மனுவை உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

7 பேர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ,ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார்.

மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்ற மனுவை  உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்