ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு.! காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி குறித்த வழக்கில் காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. .
கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டு இருந்தது. இதில் 6 இடஙக்ளில் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், மற்ற இடங்களில் உள்ள அரங்கில் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜனவரி 29ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அதில் அனுமதி கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அதில், தமிழகத்தில் அனைத்து கட்சியினருக்கும் இதே போல தான் அனுமதி வழங்கப்படுகிறதா.? அப்படி ஆம் எனில் அதனை நீதிமன்ற பதிவேட்டில் குறித்துக்கொள்ளமா என தமிழக காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், வரும் ஜனவரி 19ஆம் தேதிக்குள் இதற்கான பதில் விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும், வழக்கை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.