அதிமுகவை என் உயிரில் இருந்து பிரிக்க முடியாது…! 23-வது ஆடியோ வெளியீடு…! சசிகலா உருக்கம்…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- காரைகுடியை சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் சசிகலா பேசும், 23-வது ஆடியோ வெளியாகியுள்ளது.
- அண்ணா திமுகவிற்காக அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம். அதை என் உயிரில் இருந்தே பிரிக்க முடியாது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், காரைகுடியை சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் சசிகலா பேசும், 23-வது ஆடியோ வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில், ‘இந்த அண்ணா திமுகவிற்காக அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம். அதை என் உயிரில் இருந்தே பிரிக்க முடியாது. தொண்டர்களுடைய மனக்குமுறலை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால்தான் நான் எல்லாரிடமும் பேச ஆரம்பித்தேன்’ என கூறியுள்ளார்.
இதற்கு முன்பதாக அவர் பேசியிருந்த 22 வீடியோக்களிலும், ‘கட்சி’ எனக் குறிப்பிட்டு பேசியிருந்த அவர், இந்த வீடியோவில் ‘அதிமுக’ என குறிப்பிட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.