தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல் கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை முழுவதும் இழுத்து சென்றது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக, திருத்தணியில் 110.8 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு. மேலும், தமிழகத்தில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் 104 டிகிரியை தாண்டும் என்பதால் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூரில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லையிலும் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் என்று கூறியுள்ளது.
இந்த 2 நாட்களுக்கு பிறகு வெயில் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என்றும் பலத்த காற்று வீசும் என்பதால் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பச்சலனத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக நீலகிரியில் 7, சித்தார், எடப்பாடியில் தலா 5 செ.மீ மழை பதிவானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…