முடிவில் திடீர் மாற்றம்!இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட கிருஷ்ணசாமி முடிவு!
இன்று தென்காசி மக்களவை தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.அதில் தென்காசியில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க-தே.மு.தி.க- த.மா.கா-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளது.அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது.அதில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இன்று தென்காசி மக்களவை தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.அதில் தென்காசியில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் புதிய தமிழகம் கட்சி தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.