ஆசிரியர் சிறுநீர் கழிக்க விடவில்லை என போலிஸாரிடம் புகார் அளித்த நான்காம் வகுப்பு மாணவன்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தர்மசுதன். இவர் அதே பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையில், தர்மசூதனை ஆசிரியர் கண்டித்ததையோடு, அவரை, பள்ளி வகுப்பறையில் அமர வைத்துள்ளார். 11 மணியளவில் இடைவேளையின் போதும் மாணவ மாணவிகள் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். ஆனால் ஆசிரியர் தர்மசுதனை வெளியே விடவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய உணவு இடைவேளைக்கு வீட்டு வந்த மாணவன் தனது தனக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலி ஏற்பட்டுள்ளதாக கூறியதால் பெற்றோர் அவனிடம் இது குறித்து விசாரித்த போது தன்னை சிறுநீர் கழிக்க ஆசிரியர் அனுமதிக்கவில்லை என்று அழுதுள்ளார்.
உடனே பெற்றோர் பள்ளிக்கு சென்று முறையிட்டனர். ஆனால் பள்ளியில் முறையான பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து, சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் முறையிட்டுஉள்ளார். அங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து, மாணவனின் பெற்றோர் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவன் சாத்தான்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…