தமிழகத்தில் இருக்கும் ஆட்சியை அகற்றும் வரை போராட்டம் தொடரும் …!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இருக்கும் ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது . ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலக வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் இருக்கும் ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.தற்போது இருக்கும் அரசு பதவி விலக வேண்டும் என அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் நினைக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.