பூட்டு போடும் போராட்டம்.! கடைகளுக்கு பூட்டுக்கு மேல் பூட்டு போட்டு போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள்.!
- தஞ்சாவூர் மாவட்டத்தில் வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டுப் போட்டு அதில் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
- அதில் தமிழ் தேசியக் கட்சி பெயரில் வட மாநிலத்தவருக்கு எதிரான எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெளிமாநிலத்திலிருந்து வந்து இங்கு கடைகள் வைத்து, தொழில் புரியும் பலரும் இருக்கின்றனர். அந்த நிலையில் வட மாநிலத்தவர்கள் அவர்களது கடைகளை பூட்டி சென்ற பிறகு, இரவோடு இரவாக சில நபர்கள் பூட்டுக்கு மேல் பூட்டுப் போட்டு ,அதில் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், தஞ்சையில் டைல்ஸ், இரும்பு பொருட்கள், பலகாரங்கள் உள்ளிட்ட கடைகளை நடத்தி வரும் வடமாநிலத்தவர்கள் நேற்று இரவு கடைகளை பூட்டிச் சென்ற நிலையில், அடுத்த நாள் காலையில் கடைக் கதவுகளில் கூடுதல் பூட்டுகள் பூட்டப்பட்டிருந்ததுடன், தமிழ் தேசியக் கட்சி பெயரில் வட மாநிலத்தவருக்கு எதிரான எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. வழக்கம் போல் காலையில் கடைகளை திறக்கச் வந்த வடமாநிலத்தினர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இதேபோன்று புதுக்கோட்டையில் வடமாநிலத்தவர்களின் எலக்ட்ரிக்கல் கடை, டிரேடர்ஸ் உள்ளிட்டவற்றில் இரவோடு இரவாக மேல் பூட்டு போடப்பட்டு, அவர்களுக்கு எதிரான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் வடமாநிலத்தினர் தற்போது வரை கடைகளை திறக்கவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.