தொடரும் போராட்டம்…! அமித்ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு..!
மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளனர்
ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா மற்றும் சங்கீதா போகட் உள்ளிட்ட பலர், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளனர். இந்த சந்திப்பு 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்துள்ளது. இந்த பஜ்ரங் புனியா சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்கள் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசி உள்ளனர்.
இந்த சந்திப்பின்போது பாலியல் குற்றச்சாட்டில் பிரிஜ் பூசனை கைது செய்யக்கோரி கோரிக்கை விடுத்ததாகவும், இது தொடர்பாக டெல்லி காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்ததாகவும், பிரிஜ் பூஷன் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.