மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலமான காற்று தமிழகதில் வீசும்…! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பலமான காற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதி்களில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலமான காற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதி்களில் வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் அக்டோபர் 25 ஆம் தேதி தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேலும் ஒக்டோபர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் மழை எச்சரிக்கை இல்லை .அக்டோபர் 29 ஆம் தேதி கடலோர ஒடிஷாவில் மழைக்கு வாய்ப்பு உள்ளது . தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.