வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 1,111பேர் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.9 நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
அதேபோல் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஜனவரி 30 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.இதன் பின் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பள்ளித்தேர்வுகள் தொடங்க இருப்பதை கருத்தில் கொண்டு கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 1,111பேர் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…