திட்டமிட்டபடி தொடங்கிய வேலைநிறுத்தம்…! அரசு பேருந்து சேவைகள் பாதிப்பு…!
தமிழகம் முழுவதும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், அரசு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிதொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்து இருந்த நிலையில், அரசின் எச்சரிக்கையை மீறி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்று அதிகாலை முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில், சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எம்எஸ் உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று பேருந்துகளை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், அரசு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், சென்னை, தூத்துக்குடி, விருதுநகர், கும்பகோணம், மரக்காணம் என பல இடங்களில் மிகக்குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு, ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.