நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.ஆனால் தற்போது மழையின் தீவிரம் குறைந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது.இந்த நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் ,வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.அந்தமான் அருகே உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக மாறும் என்று தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2-அல்லது 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.