“புயல் திரும்பி செல்கிறது, இது தான் ஆன்மீக ஆட்சி ” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Default Image

காற்றை மட்டும் விட்டு விட்டு புயல் திரும்பு செல்கிறது, இது தான் ஆன்மீக ஆட்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ரஜினிகாந்த கட்சி தொடங்கியதற்கு பின் காலங்கள் மாறலாம்.கூட்டணி அமையலாம். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதில் பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தம் இல்லை.அவரே சுயமாக சிந்தித்து கட்சித் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 

தமிழகத்திற்கு தேவையான நிதியை கேட்டு அல்ல,வாதாடி அல்ல , போராடி பெற்றுத் தருவார் முதலமைச்சர் பழனிசாமி.பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு புயல்கள் விரட்டி வந்தது.கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தாங்குமா என்ற கேள்வி எழுந்து வந்தது.காற்றை மட்டும் விட்டு விட்டு புயல்கள் திரும்பி சென்று விட்டன.இரண்டு நாட்களாக புயல் அதே இடத்தில் நிற்கிறது.பின்பு வெளியே வந்தாலும் ,சென்னையை தாக்கப்போகிறது என்றாலும் , காற்றை மட்டும் மெரினா அருகே விட்டு விட்டு புயல் திரும்பி சென்று விட்டது.இது தான் ஆன்மீக அரசியல் ,ஆன்மீக ஆட்சி என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்