கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க வேண்டும் – முக ஸ்டாலின்
நாளை முதல் பல பகுதியில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாளை முதல் முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு உள்ளதால் இன்று அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க வேண்டும் என முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார். அதில், 4 நாட்கள் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் இன்று ஒரு நாள் மட்டும் கடைகளின் நேரத்தை மாலை வரை நீடிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசின் முடிவை அனைவரும் உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் இன்று மக்கள் அதிகளவில் வெளியே வர வாய்ப்புள்ளதால் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் 26 ஆம் தேதி (நாளை) முதல் 29 ஆம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதுபோன்று சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி என்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கும் மட்டுமே அனுமதி என தெரிவித்துள்ளனர். இந்த முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றன. இந்த நிலையில் முழு ஊடங்கயொட்டி இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க வேண்டும் என முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது.
நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) April 25, 2020