“ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது” – தமிழக அரசு தகவல்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடரப்பட்ட வழக்கில்,ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .
மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என வழக்கினை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது ,ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மேலும் ஆலையை இடை காலமாக திறக்க அனுமதி கோர கூட அந்நிறுவனத்திற்கு எந்தவிதமான முகாந்திரமும் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இறுதியாக ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனு விசாரணையை டிசம்பர் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிமன்றம்.